பாஜக கூட்டணியில் ரஜினி-கமல் கட்சிகள்? பிரதமர் மோடி பதில்
பாராளுமன்ற தேர்தல் இவ்வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கமல், ரஜினி கட்சிகள் இணைக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'தமிழகத்தில் ஒத்த சிந்தனையுடன் உள்ளவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் எங்களுடன் வர விரும்பும் ஒவ்வொருவரையும் அரவணைத்து சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாகவும், இது, பிராந்திய உணர்வுகளை வலுப்படுத்தும் எங்கள் நோக்கத்துடன் தொடர்புடையது என்றும் கூறியுள்ளார்.
ஆனால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே கமல்ஹாசன் உறுதிபட கூறிவிட்டார். பாஜகவுடனான கூட்டணியை தவிர்க்கும் வகையில்தான் ரஜினியும் செயல்பட்டு வருகிறார். எனவே வரும் தேர்தலில் ரஜினி, கமல் கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்