கலைஞர் கருணாநிதியின் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்
மறைந்த முன்னால் முதல்வர் கலைஞரின் வீட்டின் முன் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் ஏற்படும் சேதங்களை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் நாளை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அடுத்த 12 மணிநேரத்தில் இது அதிதீவிரப் புயலாக வலுவடைவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்துள்ளதாகவும், தற்போது புதுச்சேரிக்க்க்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாக்வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.