Daily Horoscope
✕

தென்மேற்கு பருவமழை ; தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (13:14 IST)
தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவகாற்றால் வட மாநிலங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளிலும் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் 20ம் தேதி வரை 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எல்லாம் காட்டு

நண்பர்கள் செய்த RIP பிராங்க்!.. உண்மையாகவே பறிபோன இளைஞனின் உயிர்!...

எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகுது!.. அண்ணாமலை சூசக பேட்டி...

இனிமே தமிழ்நாட்டுக்கு 351 எம்.எல்.ஏக்கள்!.. அண்ணாமலை பேட்டி...

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

திருப்பரங்குன்றம் கல்தூணியில் தீபம் ஏற்றப்பட்டது!.. இந்து அமைப்பினர் மகிழ்ச்சி...

அடுத்த கட்டுரையில்
Show comments