1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (07:47 IST)

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை அறிவிப்பு..!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக இன்று அதிகாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் சென்னையில் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva