9 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று காரணமாக மழை பெய்து வருகிறது
அந்த வகையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மதுரை, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva