வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 24 மே 2023 (16:55 IST)

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் வெப்பச்சலனம் காரணமாக மே 24, 25 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையும், மே 26, 27 ஆம் தேதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva