Daily Horoscope

நள்ளிரவு முதல் மழை: குளிர்ந்தது சென்னை

Updated: புதன், 21 நவம்பர் 2018 (07:44 IST)
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் உள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் மாம்பலம், மதுரவாயல், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், தாம்பரம் சுற்றுவட்டரா பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை தியாகராயநகர், கிண்டி, மதுரவாயல், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், பல்லாவரம், தாம்பரம், வேளச்சேரி, தரமணி, அடையாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று மிலாடி நபி காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் சென்னை மக்கள் மழையை வீட்டில் இருந்து ரசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments