சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!
சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்க சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை பொறுத்தவரை இன்றும் நாளையும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஜூலை இரண்டாம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Siva