வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 மே 2024 (17:43 IST)

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

இன்று இரவு தமிழகத்தின் 22 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு எனவும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோடை வெயில் ஒரு பக்கம் கொளுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதும் வெயிலின் தாக்கம் சமீப காலமாக குறைந்து உள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடையில் அதுவும் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள பல மாவட்டங்களில் குளிர்ந்த வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran