வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 13 மே 2024 (11:17 IST)

இன்று 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை ஆய்வு மையம்..!

தமிழக முழுவதும் ஒரு பக்கம் கடுமையான வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் இன்று மழை பெய்தால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran