வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (08:38 IST)

இன்று 19 மாவட்டங்களில் மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை உள்பட 19 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கன மழை வர பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் இன்று 19 மாவட்டங்களில்  நள்ளிரவு ஒரு மணி வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva