செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:23 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

இன்னும் மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.  
 
கடலூர், பெரம்பலூர்,  அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர் கார்குள்ளி வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், நீலகிரி, கோவை, நாமக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva