1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2023 (07:48 IST)

இன்று 16 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இதன்படி கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 16 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இம்மாதம் 10  முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,.

Edited by Siva