திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2023 (18:01 IST)

இன்று இரவு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

இன்று இரவு சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran