வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:35 IST)

காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சென்னை உள்பட  10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் நேற்று மழை ஓரளவு குறைந்தது என்பதும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை இல்லை என்பதால் இன்று கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்பதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva