திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (08:31 IST)

22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Rains
தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டதை அடுத்து சென்னை உள்பட மாநில முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இன்று மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran