கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல்!
சென்னை அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது என்பதும் தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் விரைவில் இயங்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கைக்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது
இதனையடுத்து சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்பதும் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 450 மீட்டர் நீள உயர் நடை மேடை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது
Edited by Mahendran