ராகுல்காந்தியின் ஒற்றுமை நீதி பயண நிறைவு விழா.. திருமாவளவன் பங்கேற்க திட்டம்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் நிறைவு பெற இருக்கும் நிலையில் நிறைவு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கினார். இந்த பயணத்தின் இடையில். இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர் என்பதும் இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி இந்த பயணம் மும்பையில் நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் மும்பை செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்திலிருந்து திமுக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரும் மும்பைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva