வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (10:42 IST)

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா? பொதுப்பணித்துறை அதிகாரிகள் முக்கிய தகவல்..!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் போதுமான அளவு தண்ணீர் பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவி ஆகி வருவதாகவும் இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் பஞ்சமில்லை என்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் தேவையான அளவிற்கு இருப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் தற்போது எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் தற்போது 19 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் பஞ்சம் இப்போதைக்கு இருக்காது என்றும் கோடை காலம் என்பதால் நீர் வரத்து இல்லை நீர் வெளியேற்றம் இல்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Siva