ஆட்சிக்கு வர மறுத்த எதிர்கட்சிகள்: புதுவையில் அடுத்து என்ன?
புதுவையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து அவர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்த நிலையில் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து புதுவையில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டது. குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்ற அதிரடியான காரணத்தோடு இதனி எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்கும் என்ற நிலையில் அதுவரை குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக 1991 ஆம் ஆண்டு புதுச்சேரியில் திமுக ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு பிறகு 30 ஆண்டுகள் கழித்து இப்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.