பேசுனது போதும், அடுத்து என்ன? பிரதமர் மீது ஆங்கிரி ஆன முதல்வர்!
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா இருந்தால் பிரதமர் என்ன செய்ய போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் புதுச்சேரி முதல்வர்.
நேற்று நாடு முழுவதும் ஒற்றுமையை வெளிப்படுத்தி 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாட்டு மக்கள் அனைவரும் மின் விலக்குகளை அனைத்து தீபம், மெழுகுவத்தியை ஏற்றினர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இதை செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுவரை பிரதமர் நோய் தடுப்புக்கு அறிவுரைகள் கூறினார். இனி செயல்பாடுதான் முக்கியம். சமூக இடைவெளிக்கு ஊரடங்கு உத்தரவு தேவை. ஆனால் கைதட்டுவதால் விளக்கேற்றுவதால் கொரோனா போகாது.
பிரதமரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? 14 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா இருந்தால் பிரதமர் என்ன செய்ய போகிறார். மாநிலங்கள் நிதியில்லாமல் தவிக்கின்றன. மத்திய அரசு நிதி தர வேண்டும். மருத்துவ உபகரணங்கள் கிடைக்காமல் மாநிலங்கள் அவதிக்குள்ளாகும் நிலையில் விளக்கேற்றுவதும் மணி அடிப்பதும் பலன் தராது என காட்டமாக பேசியுள்ளார்.