1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (07:51 IST)

காதல் தோல்வியால் இளம்பெண் தற்கொலை: காரணமான காதலர் வெட்டிக்கொலை

பாண்டிச்சேரியில் காதல் தோல்வியால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து அவருடைய காதலரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
புதுச்சேரியை சேர்ந்த கோட்டகுப்பம் என்ற பகுதியை சேர்ந்த ராகவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அருணா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பொறியாளர்களாக பணி புரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த காதல் குறித்து அறிந்த அருணாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும் காதலர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணா தன்னுடைய பெற்றோர்கள் தங்களுடைய காதலுக்கு ஆதரவு தெரிவிக்காததால் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் 
 
இதனை அடுத்து இறந்த காதலியை பார்க்க வந்த ராகவனை அருணாவின் உறவினர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்
 
தற்கொலை செய்து கொண்ட காதலியை பார்க்க வந்த காதலரை, காதலியின் உறவினர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது