திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (19:53 IST)

புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட அனுமதி!

தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடத்த நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவது அரசு அனுமதி அளித்துள்ளது
 
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 24 25 மற்றும் 30 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் இரவு நேர ஊரடங்கு தளர்வு அளிக்கப்படுவதாக புதுவை அரசு தெரிவித்துள்ளது 
 
ஆனால் தமிழகத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது