1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (19:02 IST)

இந்தியை அடுத்து தமிழ் மொழியில் மருத்துவ கல்வி: கவர்னர் நடவடிக்கை

mbbs
சமீபத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவ கல்வியை படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த நிலையில் புதுவையில் தமிழ் மொழியில் மருத்துவ படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தாய்மொழியில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு படிப்பார்கள் என்றும் அதன் காரணமாக அவர்கள் மிகச் சிறந்த மருத்துவராக வாய்ப்பு உள்ளது என்றும் ஏற்கனவே வல்லுநர்கள் கூறியுள்ளனர்
 
புதுவையை அடுத்த தமிழகத்திலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran