திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (17:27 IST)

நாளை வெளியாகிறதா 10, 11 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை?

10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு அட்டவணை நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் பொது தேர்வு அட்டவணை வெளியாகும் என்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி  10, 11 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு அட்டவணை நாளை காலை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல்,  நீட் தேர்வு, ஜேஈஈ நுழைவு தேர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran