அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரசாந்த் கிஷோர்
தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொது செயலாளரும், மூத்த தலைவருமான க.அன்பழகன் நேற்று இரவு காலமானார். க.அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கவுள்ள தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நேரில் வந்து அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் பிரசாந்த் கிஷோர் இணைந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.