பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமானை கண்டித்து மே 17 உள்ளிட்ட இயக்கத்தின் சீமான் வீட்டை முற்றுகையிட்டுள்ள நிலையில் இதுகுறித்து சீமான் பதில் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, பெரியார் குடும்ப உறுப்பினர்களுக்குள் உறவு வைத்துக் கொள்வதை குறித்து பேசியிருந்ததாக சொன்ன தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீமானுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
அதுமட்டுமல்லாமல் சீமான் மீது புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி, சென்னை, விழுப்புரம் என பல மாவட்டங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த பகுதிக்கு நாம் தமிழர் கட்சியினரும் வந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முற்றுகை போராட்டம் குறித்து பேசிய சீமான் “திருவள்ளுவரையும், வள்ளலாரையும் பாஜக அபகரிக்க நினைக்கிறது. திமுக அவர்களை அழிக்க நினைக்கிறது. அடிப்பதற்காக இப்போதுதான் கை ஓங்கி இருக்கிறேன். அதற்குள் அலறினால் எப்படி?” என்று பேசியுள்ளார்.
Edit by Prasanth.K