1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (23:04 IST)

கரூரில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்

வாழைத்தார்களுக்கு பாதுகாப்பு தீவிரமாக போட்ட காவல்துறையினரின் செயலால் கரூர்., நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்.
 
தமிழக அளவில் மட்டுமில்லாமல், அரசியல் களத்தில் திமுக கட்சி என்றாலே பெருமளவில் அட்ராசிட்டி ஒருபுறம் ஆங்காங்கே திமுக நிகழ்ச்சிகள் மற்றும் திமுக தலைமையிலான தமிழக அரசு நிகழ்ச்சிகளில் அரங்கேறும் வித்யாசமான நிகழ்ச்சிகள் பெருமளவில் வைரலாகி வரும் நிலையில், இன்று தமிழக அரசின் சார்பில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 நபர்களுக்கு சுமார் 267 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக இளைஞர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நலத்திட்ட உதவிகள் வாங்க வந்திருந்தாலும் நிகழ்ச்சிக்கு வந்தது சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே, வந்திருந்த நிலையில், இன்று நிகழ்ச்சிக்காக மேடை அருகேயும், திராவிட ரோல் மாடல் ஆட்சியின் வருங்காலத்தினை வரவேற்க, ஆங்காங்கே வாழைத்தார்களும் பிரமாண்ட வடிவில் கட்டப்பட்ட நிலையில், இந்த வாழைத்தார்களை, வாழை மரத்திலிருந்து பாதுகாக்க, குறிப்பாக பயனாளிகள் யாரும் வாழைத்தார்களை வெட்டி எடுக்காமல் செல்ல, ஆங்காங்கே போலீஸார் அதிரடியாக பாதுகாப்பு பணியில் முடுக்கி விடப்பட்ட நிகழ்ச்சி பெருமளவில் வைரலாகி வருகின்றது.