ஈபிஎஸ் பங்கேற்கும் நிகழ்ச்சி- அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக நிறுவனரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, வரும் ஜனவரி 19 ஆம் தேதி ஆர்.கே. நகர் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.
காவல் ஆய்வாளரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மனுவை அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின், சுண்ணாம்பு கால்வாய் திலகர் நகரில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்று காவல்துறை தெரிவித்தது.
இந்த நிலையில், தண்டையார்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.