ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (12:49 IST)

கருணாநிதியின் நல்லடக்கம் - மெரினாவில் பணிகள் தீவிரம்

அண்ணா சமாதியில் கலைஞர் கருணாநிதியின் உடலை தகனம் செய்ய பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. 
திமுக தரப்பில் இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கருணாநிதியின் உடலை மெரினாவில் புதைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் கருணாநிதியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.