அப்பாவின் நினைவிடத்தில் இருந்து அரசியல் பிரச்சாரம்! பிரியங்கா காந்தி தமிழகம் வருகை!

Priyanka Gandhi
Prasanth Karthick| Last Modified புதன், 31 மார்ச் 2021 (12:20 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் பிரியங்கா காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி தமிழகம் வர உள்ளார்.

முன்னதாக மார்ச் 27ம் தேதி அவர் தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் பின்னர் அது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 3ல் அவர் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு முதலில் சென்று மரியாதை செலுத்தி பின்னர் தனது அரசியல் பிரச்சாரத்தை அவர் தொடங்க உள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :