வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 26 மார்ச் 2020 (17:20 IST)

தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு !

தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு !

சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது.  இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.  இதுவரை தமிழகத்தில் மொத்தம்  209284  பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 2464 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், 13727 பேருக்கு தனிமை வார்டுகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 284 பேர் மருத்துவமனைகளில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும், 1039 பேருக்கு கொரோனா மாதிரிகள் சோதிகப்பட்டுள்ளதாகவும், அதில் 26 பேருக்கு உறுதி எனவும், இதில் ஒருவர் குணமடைந்தது போக, 933 பேருக்கு கொரொனா பாதிப்பு இல்லை , 80 பேருக்கு சோதனை முடிவு வராதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகிறது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினக்கூலிகளாக உள்ள மக்கள் மற்றும் அதிக அளவில் பணியில் ஈடுபடும் கட்டிய தொழிலாளர்கள், குழந்தைகள் போன்றவர்கள் உணவுக்கு கஷ்டப்படும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களின் பசி பட்டிணியையும் , வேலையில்லாத தொழிலாளர்களின் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல நல்ல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எட்ப்பாடி பழனிசாமி அவர்கள், இந்த ஊடரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை உள்ளதால், கொரோனாவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் பண வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,பண வசூலை நிறுத்தி வைக்காமல், இந்த உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.