புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (09:08 IST)

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கம்! கட்டணம் உயர்வா?

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல், 50 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்னும் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இன்று முதல், காலை 5 மணி தொடங்கி இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள மண்டலம் விட்டு மண்டலம் இயக்க அனுமதி கிடையாது. ஓட்டுநர், நடத்துநர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். நடத்துநர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும்.பேருந்தில் வரும் பயணிகளுக்கு சானிட்டைசர் வழங்க வேண்டும்.பேருந்துகளில் கைப்பிடி மற்றும் கை எங்கெங்கு படுகிறதோ அங்கு பாதுகாப்பாக சானிட்டைசர் வைத்துத் துடைக்க வேண்டும். 60 சதவிகிதப் பயணிகளை மட்டுமே பேருந்துகளில் ஏற்றி இறக்க வேண்டும்.கட்டணத்தைப் பொறுத்தவரை பழைய கட்டணம்தான் வசூலிக்க வேண்டும். பேருந்துகளை இயக்காத நாட்களுக்கு இன்சூரன்ஸ் கால நீட்டிப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளைச் சம்மேளனம் எடுத்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.