அம்மா ஸ்கூட்டர் வழங்க பிரதமர் மோடி சென்னை வருகை
தமிழக அரசின் ஸ்கூட்டர் மானிய திட்டத்தை, வரும் 24ல் பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்களுக்கு வாகனத்தின் விலையில் 50% மானியம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கவும், இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் பெறவும் பெண்கள் வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களிலும் குவிந்தனர்.
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.