திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (12:38 IST)

தமிழகத்தை குறி வைக்கும் பிரதமர் மோடி.! மார்ச் 22-ல் மீண்டும் வருகை..!!

Modi
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் 22-ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்.
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
 
அதன்படி, வரும் 22ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். தென்மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். 
 
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது, பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, இந்த தேர்தலில் எப்படியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிட அக்கட்சி மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.


குறிப்பாக தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வெற்றி பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.