1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (17:22 IST)

பிரதமருடான சந்திப்பில் தனிப்பட்ட விருப்பம் எதுவுமில்லை... நாளிதழ் செய்திக்கு அமைச்சர் பிடிஆர் பதில்..!

palanivel
மோடிக்கும் அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜனுக்கும் தனிப்பட்ட முறையில் உறவு இருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியான நிலையில் அந்த செய்திக்கு அமைச்சர் பிடிஆர் பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தின் முன்னணி நாளிதழில் பிரதமருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்கிறது என்றும் அதனால் தான் மதுரை வந்த பிரதமரை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது 
 
இதற்கு பதில் அளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எனக்கும் பிரதமருக்கும் தனிப்பட்ட உறவு இருப்பது போல் செய்தி வரும் வந்துள்ளது. முதல்வர் கொடுத்த பணியை நான் செய்தேன். அதனால் தான் மதுரைக்கு சென்று பிரதமரை வரவேற்று அதன் பின் வழி அனுப்பி வைத்தேன். அதில் எந்த அரசியலும் கிடையாது.  அரசாங்கத்தில் பணியை நான் செய்தேன் என்று கூறினார் 
 
மேலும் ஒரு அரசாங்கத்தை நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது என்றும் அதையெல்லாம் கடந்து தான் நாங்களும் முதல்வரும் பணி செய்து வருகிறோம் என்றும் நாளிதழில் இதுபோன்ற செய்தி வருவது துரதிஷ்டமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே பாஜகவுக்கு ரகசிய ஆதரவு தெரிவித்து வருவதாக பிடிஆர் மீது சில அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில் நாளிதழில் வந்த இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கு அமைச்சர் பிடிஆர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.