1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (09:10 IST)

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

Arrest
சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவில் பூசாரி ஒருவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தலைவர் ஆக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் இளம்பெண் ஒருவர் அங்கு பூசாரியாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவரிடம் பழகி உள்ளார். இருவரும் நட்பாக பழகிய நிலையில் ஒருநாள் பூசாரி கார்த்திக் முனுசாமி, இளம்பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாக காரில் அழைத்துச் சென்றதாகவும் அதன் பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர் தீர்த்தத்தை கொடுத்த நிலையில் தீர்த்தத்தை கொடுத்ததும் மயங்கி விழுந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் திடீரென கார்த்திக் முனுசாமி தலைமறைவானார். இந்த நிலையில் அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva