டார்கெட் திமுக மட்டும் இல்ல... அதிமுக எம்பிக்களையும் கிழித்த பிரேமலதா!
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். இதுகுறித்து துரைமுருகன் தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என கூறிவிட்டதாக சொன்னார்.
இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
தேமுதிக கூட்டணி குறித்து பேசியிருந்தாலும் கூட துரைமுருகன் இப்படி ஒப்பனாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்தான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் சேர்த்து திட்டிதீர்த்தார்.
அதிமுகவை குறித்து அவர் பேசியதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளில் வென்றார்கள். அதிமுக அப்படி வென்றதால் தமிழகத்திற்கு என்ன நன்மை நடந்தது. 37 அதிமுக எம்பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வர முடிந்தது.
ஜெயலலிதாவை சட்டப்பேரவையிலேயே எதிர்த்தவர் விஜயகாந்த். துணிச்சலாக அப்போதே பேசியவர். மணப்பெண் இருந்தால் 10 பேர் கேட்கத்தான் செய்வர். தேர்தலும் அதுபோலதான். அதனால்தான் எங்களிடம் பேசுகிறார்கள். ஆக்கப்பொறுத்துவிட்டீர்கள், ஆறப்பொறுங்கள் என பேசினார்.