வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2019 (14:13 IST)

நீ வா போ ...கேப்டன் விஜயகாந்த் வழியில் செல்லும் பிரேமலதா?

துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால்  தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுகவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது.
ஆனால் துரைமுருகனின் குற்றச்சாட்டை தேமுதிக தரப்பில் மறுத்துள்ளன. துரை முருகன் தான் திமுக தலைமை மீது அதிருப்தி கொண்டு தன்னிடம் புலம்பினார் என எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். இதனால் திமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.  அதையடுத்து மாறி மாறி துரைமுருகனும் சுதீஷும் குற்றச்சாட்டுகளை வைக்க தேமுதிக மற்றும் திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.
 
இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய தேமுதிகவின்  பொருளாளரான பிரேமலாத விஜயகாந்த் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
 
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் திடீரென்று செய்தியாளர்களை நோக்கி நீ வா போ என ஒருமையில் பேசினார்.
எத்துனை பெரிய அரசியல் தலைவர்களும் எவ்வளவு இக்கட்டான நிலையிலும் மரியாதையாக பேசுவது வழக்கம். ஆனால்  செய்தியாளர்களை பிரேமலதா இவ்விதம் ஒருமையில் பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
நாட்டின் நான்கு தூண்களில் ஒருதூணாக ஊடகமும் செய்தித்துறையும் முக்கியமாக உள்ளது. அப்படி இருக்கும் போது இன்று செய்தியாளர்களை மரியாதைக் குறைவாக பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். 
 
ஏற்கனவே பொது இடத்தில் விஜயகாந்த் அவரது கட்சி நிர்வாகிகளை தாக்கியதாக பலர் புகார் கூறியிருந்தனர். மேலும் முக்கிய கட்சி பிரமுகர்கள் செய்தியார்கள் எல்லோரும்  கலந்து கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சில் ’தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க ’என தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை எடுத்து அடிக்கப் பார்த்த காட்சி எல்லா மீடியாவிலும் வெளியானது. 
 
அதேபோல் சட்டசபையில் ஒருமுறை ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது , விஜயகாந்துக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதலெழுந்த போது தன் நாக்கை துரித்து ஆவேசமாக விஜயகாந்த் பேசி அரசியல் சபையை சலசலப்பாக்கினார் விஜயகாந்த். 
 
இன்று அவரது மனைவி  மற்றும் கட்சி நிர்வாகியுமான பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் பேசிய விதம் செய்தியாளர்களுக்கு மன வருத்தத்தை  ஏற்படுத்தியுள்ளதென்றால் அது மிகையல்ல. 
 
கருணாநிதி, ஜெயலலிதா போன்று அரசியல் மாண்புடையவர்கள் தற்போது இல்லாததும் இதற்குக் காரணம்.