உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் நிலைபாடு என்ன? பிரேமலதா பேட்டி!
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் நிலைபாடு என்னவென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நிர்வாக வசதிக்காக 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் நிலைபாடு என்னவென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றியை கண்டு தேமுதிக ஆணவப்படுவதோ, தோல்வியை கண்டு துவண்டு போவதோ இல்லை. வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய கட்சி.
அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை எடுத்துச் செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.