வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:05 IST)

சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்! யார் யாருக்கு தபால் வாக்குகள்?

சென்னையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை அடுத்து இன்று முதல் சென்னையில் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை தபால் வகுப்புகள் சேகரிக்கும் பணி நடைபெறும் என்றும்11,369 மாற்றுத்திறனாளிகள், 63,751 முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
தபால் வாக்களிக்க 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து தபால் வாக்குகள் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை பொறுப்புடன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran