தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழை காரணமாக தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி, பவானி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக இருந்த தண்ணீர் பிரச்சனை மழையால் சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை பெய்யாமல் ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.