புதிய காற்றழுத்தம் புயல் சின்னமாக மாற வாய்ப்பு...
நாளை அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து டிசம்பர் 1 ஆம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவதால் தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னமாக) மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.