செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (14:19 IST)

மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

சென்னை அருகே உள்ள பூந்தமல்லி பேருந்து நிலையம், நெருக்கடியான இடத்தில் இயங்கி வரும் நிலையில்  இந்த பேருந்து நிலையத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் வாகன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்லவும், உள்ளே செல்லவும் கடுமையான பிரச்சினைகள் உள்ளன. இதைத் தீர்க்க, குத்தம்பாக்கத்தில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம் கட்டும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் பூந்தமல்லி பேருந்து நிலையம் அங்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது.

திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த நிலையம் தயாராகி வருகிறது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஓசூர், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பணிகளை விரைவில் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Edited by Siva