1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2016 (13:18 IST)

கரூரில் நடந்த பூமி பூஜை : அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கர் பங்கேற்பு

கரூரில் நடந்த பூமி பூஜை : அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கர் பங்கேற்பு

கரூரில், சுமார் 40 லட்சம் மதிப்பிலான திட்டங்களுக்கான பூமி பூஜையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.


 

 
கரூர் நகராட்சி மற்றும் 36, 29, 34, 35 வார்டுகளுக்கு உட்பட்ட 9 இடங்களில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கவும், கழிவுநீர் வடிகால் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று அந்தந்த பகுதியில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கான பணிகளை துவக்கி வைத்தனர். 
 
மேலும், இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், நகர்மன்ற தலைவர் செல்வராஜ், அந்தந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
இதைத்தொடர்ந்து கரூர் கோட்டைமேடு நகராட்சி பள்ளி மற்றும் தெரசா பெண்கள் மேல்நிலை பள்ளியில் வரும் உள்ளாட்சி  தேர்தலை ஒட்டி கரூர் மாவட்ட அளவில் துரித படுத்தபட்டு வரும் வாக்காளர் பட்டியலினை ஆய்வு மேற்கொண்டார்.