திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (09:52 IST)

அம்பேத்கர் சிலையை உடைத்த மர்ம நபர்கள்! – பொன்னேரியில் பரபரப்பு!

Ambetkar Statue
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் என்ற கிராமத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த சிலையை மர்ம நபர்கள் தாக்கி சிலையின் முகம் மற்றும் கையை சேதப்படுத்தியுள்ளனர்.

காலையில் அப்பகுதி வழியாக சென்ற மக்கள் சிலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த சோழவரம் போலீஸார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அங்கிருந்த மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K