Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்முடி பதவி தப்பிக்க ஒரே வழி.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..!

Written By Siva
Updated: வியாழன், 21 டிசம்பர் 2023 (11:24 IST)
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி தானாக போய்விட்டது. ஆனாலும் அவருக்கு முப்பது நாட்கள் மேல்முறையீடு செய்ய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் உடனே சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை  

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் மீண்டும் அவருக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒரு வாய்ப்பை தவற அவரது பதவி தப்பிக்க வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால்  தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி தரவில்லை என்றால்  அவரது பதவி காலியானது காலியானது தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  

ஜனவரி முதல் வாரம் உச்சநீதிமன்றம் திறக்கப்படும் போதுதான் பொன்மொடியின் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது..

Edited by Siva

எல்லாம் காட்டு

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

பாகிஸ்தானில் திறக்கப்படும் முதல் கூகுள் அலுவலகம்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திறந்து வைத்தார்...

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆகிறாரா முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.. சுயசரிதையும் வரப்போகிறதா?

திமுகவை அடுத்து அதிமுகவிலும் நிர்வாக ரீதியான மாற்றமா? கூட்டத்தை கூட்டும் ஈபிஎஸ்...

பள்ளிகளை ஆய்வு செய்யும் கரப்பான்பூச்சி கட்சி.. வாடகைக்கு மாணவர்களை கொண்டு வந்த பள்ளி நிர்வாகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments