Daily Horoscope
✕

புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

Written By Sugapriya Prakash
Updated: புதன், 22 செப்டம்பர் 2021 (15:57 IST)
புதுச்சேரி பாஜக மாநிலங்களவை வேட்பாளர் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.

 
புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதியை பாஜக மேலிடம் நேற்று அறிவித்தது.
 
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முனுசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

எல்லாம் காட்டு

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - உலக நாடுகள் பதட்டம்

ஜப்பானில் ஒரு வீரமணி - ஹோட்டலில் ஆர்டர் போட்ட 11 லட்சம் ஃபாலோயர்ஸ்...

கார் ஓனர்களுக்கு மோடி கொடுத்த ஜாக்பாட் - சுங்கச்சாவடியில் சலுகை

நடக்குற பார்த்த போக்கிரி காமெடிதான் ஞாபகத்துக்கு வருது - பழனிச்சாமி நக்கல்

நீங்க கரூர்ல நில்லுங்க தலைவரே... நாமதான் ஜெயிக்கிறோம்! - ஸ்டாலினிடம் சொன்ன செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments