வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2018 (16:34 IST)

கமல் அரசியலுக்கு வந்தால் எதில் மாற்றம் வரும்: கலாய்க்கும் பொன்னார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தமிழக அரசியல் களத்தில் இறங்கி தங்கள் ஓட்டத்தை தொடங்க உள்ளனர். இந்நிலையில் இந்த புதிய வரவுகள் குறித்து ஏற்கனவே உள்ளவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
 
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் இருந்து ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்கு பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த பொன்னார், கமல், ரஜினி வருகையால் மற்ற அரசியல் கட்சிகளில் மாற்றங்கள் கட்டாயம் ஏற்படும். ஏனென்றால் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள் இருக்கும்போது, இந்த இரண்டு அரசியல் கட்சிகளும் அதில் சேர்கிறது. அதனால் எண்ணிக்கையில் மாற்றம் வரும் அல்லவா? என குறிப்பிட்டார்.