செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (16:16 IST)

துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவர் உயிரிழப்பு..

சென்னை அருகே பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் முகேஷ். இந்நிலையில் இன்று அவரது நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார் முகேஷ். அப்போது விஜயின் சகோதரன் உதயா வீட்டிற்கு வெளியே “கேம்” விளையாடிக் கொண்டிருந்தார்.

வீட்டிற்கு உள்ளே விஜய்யும் முகேஷும் இருக்க, திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் பதறிபோனான் உதயா. அப்போது விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். உடனடியாக உள்ளே சென்ற உதயாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நெற்றியில் துப்பாக்கி பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார் முகேஷ்.

உடனடியாக முகேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உதயாவை தாழம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கையகப்படுத்திய போலீஸார் தலைமறைவான விஜய்யை வலை வீசி தேடி வருகின்றனர்.